நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா
x
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா - ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த யோகா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஜக்கி வாசுதேவ் பரிந்துரைத்த சிம்ஹா யோகிக் கிரியா எனப்படும் யோகா பயிற்சியை செய்யலாம் என, தனது துறை பணியாளர்களுக்கு,  மத்திய வீட்டுவசதி துறை அமைச்சகம் கூறியுள்ளது.சிம்ஹா யோகா கிரியை எனப்படும் யோகா பயிற்சி குறித்த வீடியோவை, ஜக்கி வாசுதேவ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அந்த லிங்க்கை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.அதில், பெருந்தொற்று அதிகரித்து வரும் இந்த சவாலான காலகட்டத்தில் இந்த யோகா பயிற்சி சுவாச மண்டலத்தை வலிமையாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் தற்போதைய இடர்பாட்டை நேர்மறையான முறையில் நம்மை தயார் படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த யோகா பயிற்சியை மேற்கொள்ள ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் எனவும்,வெறும் வயிற்றில் இந்த யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கார் ஓட்டுநர்கள் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை முறையாகப் படித்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்