ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு

ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு
x
ஆக்ஸிஜன் தயாரிப்பு- வேதாந்தா நிறுவனம் மனு


ஆக்ஸிஜனை இலவசமாக தயாரித்து வழங்க ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 50 மெட்ரிக் டன் அளவில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை ஈடுசெய்ய இந்த கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளதால் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடமும் இயக்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் வாயுக்கலன்களை அளிக்க ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை  இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்