ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு... மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு... மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு... மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு
x
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு... மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

மத்திய அரசின் மோசமான திட்டமிடல் காரணமாகவே இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு தடுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பிரியங்கா காந்தி இந்தியாவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகளுக்கான காரணம் ஏன் என மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜனவரி முதல் மார்ச் வரையில் 6 கோடி தடுப்பூசி மருந்துகளும்,  6 மாதங்களில் 11 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கும் பிரியங்கா காந்தி, இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்காதது ஏன் எனக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இந்தியாவில் தடுப்பூசி, ரெம்டெசிவிர் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு மோசமான திட்டமிடலும், போதிய வியூகம் இல்லாமையும் காரணம் என  பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
  
Next Story

மேலும் செய்திகள்