உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்
உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்
x
உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல் 

உயர் நீதிமன்றங்களில் 40 சதவீத நீதிபதிகளின் பணியிடங்கள், காலியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, காலிப் பணியிடங்களை நிரப்பாதது, உயர்நீதிமன்றங்களில் சிக்கலான சூழலை உருவாக்கி உள்ளதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சில வழிகாட்டுதலை வழங்கினர்.அதன்படி, உயர்நீதிமன்ற கொலிஜீயம் அளிக்கும் பரிந்துரைகள் குறித்த அறிக்கையை, 4 முதல் 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,கொலிஜீயத்தின் பரிந்துரைகள் குறித்து மாநில அரசு மற்றும் உளவுத்துறை அளிக்கும் அறிக்கையை, உச்சநீதிமன்றத்துக்கு  8 முதல் 12 வாரங்களுக்குள் மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும், உச்சநீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரை கிடைத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள், உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள்,உச்சநீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையில் சிக்கல் ஏதாவது இருந்தால், உடனடியாக அதை தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்