பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
பெங்களூரு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் விளக்கினார். பெங்களூரு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், பட்டு வாரிய சந்திப்பில் இருந்து கே.ஆர்.புரம் வரையிலும், அடுத்ததாக கே.ஆர்.புரத்தில் இருந்து விமான நிலையம் வழியாக ஹெப்பால் சந்திப்பு வரை மற்றொரு வழித் தடத்திலும் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும், 14 ஆயிரத்து 788 கோடி செலவில் 58.19 கி.மீ தொலைவுக்கு, இந்த மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்