அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் விசாரணை... கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் விசாரணை... கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
x
தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
தாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 

இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் திரைப்படங்கள் என்ற பெயரில் ஆபாச காட்சிகளை காட்சிப்படுத்தும் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது என கருத்து தெரிவித்தது.

மேலும் ஓடிடி சமூக வலைதளங்களை முறைப்படுத்த மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இவ்வழக்கு குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் ஆபாசக் காட்சிகளை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியது.

அப்போது மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் தொடர்பாக புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்