இந்தியா - சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை... விரைந்து படைகளை வாபஸ்பெற இந்தியா வலியுறுத்தல்

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.
இந்தியா  - சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை... விரைந்து படைகளை வாபஸ்பெற இந்தியா வலியுறுத்தல்
x
எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம்  நடைபெற்றது.

கிழக்கு லடாக்கில் மே மாதம் இந்திய-சீன படைகள் மோதலையடுத்து பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து இருதரப்பு படைகளும் ஏற்கனவே இருந்த நிலைக்கு திரும்புவது தொடர்பாக இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாங்காங் ஏரி பகுதியில் இருந்து சீன ராணுவம் திரும்பியது. இந்நிலையில் நேற்று 10 வது சுற்று பேச்சுவார்த்தை சீன எல்லையில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது. மதியம் தொடங்கிய பேச்சுவார்த்தை 16 மணி நேரம் தொடர்ந்து, இரவு 2 மணி வரையில் நீடித்தது என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது,  ஹாட் பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் ஆகிய பகுதிகளிலும் படைகளை விலக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் படைகளை விரைந்து விலக்க இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் ராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்