வழக்கறிஞர் தம்பதி கொடூர கொலை... பட்டப்பகலில் சாலையின் நடுவே பயங்கரம்

தெலங்கானா மாநிலத்தில் வழக்கறிஞர் தம்பதியர் கூலிப்படையால் கொடூரமாக சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
வழக்கறிஞர் தம்பதி கொடூர கொலை... பட்டப்பகலில் சாலையின் நடுவே பயங்கரம்
x
தெலங்கானா மாநிலத்தில் வழக்கறிஞர் தம்பதியர் கூலிப்படையால் கொடூரமாக சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

தெலங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் வாமன் ராவ்.  இவரின் மனைவி நாகமணி. இவர்கள் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்தனர்.சம்பவத்தன்று இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு காரில் வந்த போது திடீரென காரில் வந்த ஒரு கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது. பின்னர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சாலையின் நடுவே சரமாரியாக வெட்டி சாய்த்தது.நடந்த இந்த சம்பவங்களை எல்லாம் சாலையில் சென்ற ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு ​செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தனர்.இதனிடையே வாமன் ராவின் தந்தை கிஷன் ராவ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அதே ஊரை சேர்ந்த சில பெரும்புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், கூலிப்படையை வைத்து அவர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.வழக்கறிஞர்களாக இருந்த போதிலும் பல்வேறு பொது பணிகளில் ஆர்வமாக இருந்தவர்கள் வாமன்ராவ் - நாகமணி தம்பதியர். பட்டியலினத்தை சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் காவல் துறை கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த சம்பவத்தை கையில் எடுத்து இவர்கள் வழக்கு நடத்தி வந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹைதராபாத் காவல் ஆணையரை பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என பலமுறை இவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.பட்டப்பகலில் சாலையின் நடுவே 2 பேரையும் வெட்டிச் சாய்த்த கும்பல், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான காரை எடுத்துச் சென்றதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.வழக்கறிஞர்களின் இந்த  கொடூர மரணத்திற்கு மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கொரோனாவால் வருமானமின்றி தவித்த பல வழக்கறிஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த இந்த தம்பதியர் இப்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்