திரைப்பட விருதுகள் விழா - விருதுகளை கையால் வழங்க மறுத்த கேரள முதல்வர்
கேரள திரைப்பட விருது வழங்கும் விழாவில், விருதுகளை தன் கையால் வழங்க மறுத்து, முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள திரைப்பட விருது வழங்கும் விழாவில், விருதுகளை தன் கையால் வழங்க மறுத்து, முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
கேரளாவில் ஆண்டு தோறும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றார். ஆனால், விருதை அவர் உரியவர்களின் கையில் வழங்காமல், மேசை மீது வைத்தார். மேசையிலிருந்து உரியவர்கள் தங்கள் விருதுகளை எடுத்துச் சென்றனர். இதன்மூலம், கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார். மேலும், இந்த நிகழ்ச்சியில், சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
Next Story