விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை; காவல்துறையினர் 394 பேர் காயம்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் 394 பேர் காயமடைந்ததாக டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை; காவல்துறையினர் 394 பேர் காயம்
x
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் 394 பேர் காயமடைந்ததாக டெல்லி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினம் அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய பேரணியில் கடும் வன்முறை மூண்டது.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி காவல் ஆணையர், வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு பல வழிகள் இருந்தும் அமைதியாகவே செயல்பட்டதாக குறிப்பிட்டார். விவசாய சங்க தலைவர்களும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என கூறிய அவர், சிசிடிவி ஆதாரங்கள் அடிப்டையில் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பேரணியில் 5,000 டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் என விவசாயிகள் கூறியிருந்ததாகவும், ஆனால் அதனை மீறி பல டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றதாகவும் ஆணையர் விளக்கினார். 

டெல்லி செங்கோட்டையில் நடந்த டிராக்டர் பேரணியின் போது உயிரிழந்த விவசாயி, 
சுடப்பட்டு இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், வீடியோ காட்சிகளில் வெளியானது போல்,  டிராக்டரில் வந்த வேகத்தில் விவசாயி தலைகீழாக விழுந்ததும், அதனால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லை பகுதிகளில், கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது வன்முறை வெடித்தது. இதனால் டெல்லியே போர்க்களமாக காட்சியளித்தது. இந்நிலையில், 
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை 
திரும்ப பெறுவதாக, போராடி வரும் 2 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பாரதிய  கிசான் யூனியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், போராட்டம் வேறு சிலரால் திசை மாறி செல்வதால், இதில் பங்கேற்க விரும்பவில்லை என அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. போராட்டத்திற்கு முடிவுக்கு கொண்டு வருவது குறித்து வேதனையடைவதாக 
பாரதிய கிசான் யூனியன் தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடை பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அன்றைய தினம் நடை பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை காரணமாக அந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது. 

இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவர் அபய் சிங் சவுதலா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரியானா சட்டப்பேரவை உறுப்பினரான அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே சமயம் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது எம்எல்ஏ பதவியை அபய் சிங் சவுதலா ராஜினா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அரியான மாநில சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்