சீன செயலி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - சீன செயலி வழக்கில் தொடரும் அதிரடி

கந்துவட்டிக்கு கடன் கொடுத்த சீன செயலி குறித்த விவகாரத்தில் அடுத்த அதிரடியாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சீன செயலி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - சீன செயலி வழக்கில் தொடரும் அதிரடி
x
கந்துவட்டிக்கு கடன் கொடுத்த சீன செயலி குறித்த விவகாரத்தில் அடுத்த அதிரடியாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.கடன் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிக வட்டி வசூலித்ததாக சீன செயலி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2 சீனர்கள் உட்பட 8 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் கைதான சீனர்களை காவலில் எடுத்து விசாரித்ததில், மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான ஹாங்க், சீனா தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சீன கும்பல்  சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதால் அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட வேண்டியுள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த கும்பல் மோசடியில்  ஈடுபட்டுள்ளதாலும், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பு இருப்பதாலும் அந்தந்த மாநில போலீஸ் நோடல் அதிகாரிகளுடன் இணைந்து தமிழக  சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், 10 பேமண்ட் கேட்வே வழியாக பணமானது wazirx என்ற நிறுவனம் மூலம் கிரிப்டோ கரன்சியாக சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.அப்படி கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்ட பணமானது சிங்கப்பூரில் ஹூ ஷுங் என்ற சீனர் வங்கி கணக்கிற்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிம்கார்டுகளை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து ஷுங்க்ளியான் என்ற மற்றொரு சீனர்  இயக்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே முளையாக செயல்பட்ட ஹாங்க் என்ற சீனரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில், ஹூ ஷுங் மற்றும் ஷுங்ளியான் என்ற இரண்டு சீனர்களுக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.பேமண்ட் கேட்வே வழியாக , wazrix என்ற நிறுவனம் ஆர் பி ஐக்கு தெரியாமல் எவ்வாறு வெளிநாட்டுக்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பினார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்.பி.ஐக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ரேசர்பே பேமண்ட் கேட்வே மூலமாக ஒன்றரை கோடி ரூபாய் அளவு பிட்காயின்கள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கேட்வே மூலம் எவ்வளவு பணம் பிட்காயின்களாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.தொடர்ந்து மற்ற பேமண்ட் கேட்வே நிறுவனங்களையும் விசாரணைக்குட்பட்டுத்தினால் பல சட்டவிரோத பரிவர்த்தனைகள் சிக்கும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


Next Story

மேலும் செய்திகள்