மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பம் - திரிணாமுல் காங்கிரஸ்ல் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார் என, மத்திய அமைச்சர் அமித்ஷா கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பம் - திரிணாமுல் காங்கிரஸ்ல் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி
x
மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரில், நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, மேற்கு வங்க மாநில அரசியலில், புதிய திருப்பமாக திரிணாமூல் காங்கிர​ஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நிர்வாகியுமான சுவேந்து அதிகரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.சுனில் மோன்டல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 
இந்த பேரணியில் உரையாற்றிய அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தவறான ஆட்சி, ஊழல் ஆகியவற்றால் திரிணாமூல் காங்கிரஸ் விரைவில் காலியான கூடாரம் ஆகி விடும் என்றார். வருகிற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தனி ஒரு ஆளாக மட்டுமே அந்த கட்சியில் இருப்பார் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்