அயோத்தியில் ராமர் கோவில் உள்நாட்டு பக்தர்களின் பங்களிப்போடு கட்டப்படும் - ராமர் கோவில் அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோவில் உள்நாட்டு பக்தர்களின் பங்களிப்போடு கட்டப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் உள்நாட்டு பக்தர்களின் பங்களிப்போடு கட்டப்படும் - ராமர் கோவில் அறக்கட்டளை
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், உள்நாட்டு பங்களிப்போடு மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கோவில் மாதிரியை விரைவில் கோடிக்கணக்கான இந்துக்களின் இல்லங்களில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராய் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்த பணம் பெற தேவையான அனுமதி, அறக்கட்டளைக்கு இல்லை எனவும் ராய் தெரிவித்துள்ளார். தேசிய கோவிலாக ராமர் கோவில் உருவெடுக்க உள்ள நிலையில், நாடு முழுவதும் மக்களை சந்தித்து பணம் வசூலிக்க ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ர அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதற்காக ராம பக்தர்களிடம் இருந்து  நன்கொடை பெறும் வகையில், 12 கோடியே 12 லட்சம் கூப்பன்கள் அச்சிட்டு உள்ளதாகவும் ராய் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 960 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்