அமைச்சர் அணில் விஜிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரியானா அமைச்சருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் கொடுக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்து உள்ளது.
அமைச்சர் அணில் விஜிக்கு கொரோனா தொற்று உறுதி
x
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் நவம்பர் 20-ம் தேதி தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டு உள்ளார். இந்நிலையில் பயோடெக் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது. அதில், பரிசோதனையில் 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் வழங்கப்படும் என்றும் 14 நாட்கள் கழித்து 2-வது டோஸ் கொடுக்கும் போது செயல்திறன் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும், 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டால்தான் மருந்து முழுமையாக பயனளிக்கும் வகையில் தடுப்பூசி வடிவமைக்கப்பட்டு உள்ளது எனவும் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்