என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயுடன் தொடர்பில் இருந்த 37 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உத்தர பிரதேச டிஜிபிக்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே
x
உத்தரபிரதேச மாநில பிரபல ரவுடி விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த  ஜூலை 3 ஆம்  தேதி கான்பூர் சென்ற போலீசார் மீது ரவுடிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர்,  ஜூலை 10 ஆம் தேதி  விகாஸ் துபேயை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில், கான்பூரில் பணியாற்றிய போது 37 போலீசார் விகாஸ் துபேக்கு உதவியதாக சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 18  இன்ஸ்பெக்டர்கள்,  10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 கான்ஸ்டபிள்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 8 போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், 22 போலீசாரை விசாரணைக்கு உட்படுத்த கோரியும் உள்துறை அமைச்சக செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்