பீகார் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா - பீகார் அரசியலில் திடீர் திருப்பம்

பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
பீகார் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா - பீகார் அரசியலில் திடீர் திருப்பம்
x
பீகார் கல்வி அமைச்சர் மேவாலால் சவுத்ரி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், புதிய குழப்பம் உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்ற நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்திரி பொறுப்பேற்றார். இந்த நிலையில், மேவாலால் சவுத்ரி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி இருந்த நிலையில், ராஜினாமா செய்துள்ளார். முன்பு விவசாய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது மேவாலால் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதேபோல, அண்மையில் தேசிய கீதம் பாடத் தெரியாமல் சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்