பா.ஜ.க. வுக்கு எதிராக அணி திரட்டும் சந்திரசேகர ராவ்
பதிவு : நவம்பர் 19, 2020, 04:00 PM
பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை கட்டமைக்க உள்ளதாக தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த தலைவர்களின் கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாநில கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். சரத்பவார், ஸ்டாலின், மாயாவதி, மம்தா, குமாரசாமி, அகிலேஷ் யாதவ், பிரகாஷ் சிங் பாதல், நவீன்பட் நாயக் ஆகியோரை இணைத்து இந்த கூட்டத்தை கூட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குவது பற்றி செயல்திட்டம் உருவாக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

பிற செய்திகள்

டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

34 views

2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

10 views

மாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

19 views

"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

400 views

சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு ?

சபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 views

கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் - முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.