பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு - தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு - தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் முடிவு
x
பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றியது. இதனையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று பாட்னாவில் நிதிஷ் குமார் வீட்டில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்ட இந்த கூட்டத்தில் முதல்வராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து நிதிஷ் குமார் நாளையே முதல்வராக பதவி ஏற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நிதிஷ்குமார் பீகாரின் முதல்வராக 4 முறை பதவியேற்க உள்ளார். அவர், 2005-ம் ஆண்டில் இருந்து அங்கு முதல்வராக இருந்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தையில் பாஜக தரப்பில் இரு துணை முதல்வர் பதவி மற்றும் கூடுதல் அமைச்சர் பதவிகள் கேட்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார் அமைச்சரவையில் யார் யாருக்கு எவ்வளவு இடம் என்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்