ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு
x
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  உள்ளனர். மேலும், கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஒடிசாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட துப்பாக்கி தொழிற்சாலை

ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தில் உள்ள மாலிசாஹி என்ற இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த கபு மகாராணா என்பவரை கைது செய்த போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உமா காந்த் மாலிக் தலைமையிலான போலீசார் அங்கிருந்த ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கபு மகாராணா மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் விழா - சபரிமலை நடை நாளை திறப்பு

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை நாளை திறக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளில் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்படுகிறது. மேலும் இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சபரிமலை கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்