டேங்கர் லாரி-செம்மர கடத்தல் வாகனம் மோதல் - கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலி
பதிவு : நவம்பர் 02, 2020, 01:54 PM
ஆந்திராவில் செம்மரம் கடத்தி சென்ற சுமோ வாகனம் தீப்பற்றி எரிந்ததில் செம்மரக் கடத்தல்காரர்கள் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
ஆந்திர மாநிலம் கடப்பா விமான நிலையம் அருகே இன்று காலை டீசல் டேங்கர் லாரியும், சுமோ வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்த டீசல் சுமோ மீது கொட்டியது. இதில் சுமோ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வாகனத்தில் இருந்த 4 பேரும் உடல் கருகி பலியாகினர். இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு கார் சுமோ மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், எரிந்த சுமோ வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் செம்மரம் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செம்மரத்தை கடத்தியவர்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

3 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

4 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

7 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.