வந்தே மாதரம் பாடிய 4 வயது சிறுமி - சிறுமிக்கு பிரதமர் மோடி புகழாரம்

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் ஹனம்டே வந்தே மாதரம் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வந்தே மாதரம் பாடிய 4 வயது சிறுமி - சிறுமிக்கு பிரதமர் மோடி புகழாரம்
x
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி எஸ்தர் ஹனம்டே வந்தே மாதரம் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மழலைக்குரலில் சிறுமி பாடும் வீடியோவை மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரது மனதையும் கொள்ளைக்கொண்ட அந்த வீடியோவை பிரதமர் மோடியும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அழகானது மற்றும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, சிறுமியால் பெருமையடைவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்