அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வருவாய்

அக்டோபர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாயாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வருவாய்
x
ஊரடங்கு நெருக்கடிகள் ஓரளவுக்கு தளர்வுக்கு வந்துள்ள நிலையில், ஜி.எஸ்.டி. வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த நிலையை எட்டுவது, கடந்த எட்டு மாதங்களில் இதுவே முதல் முறையாகும். 

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலில், அக்டோபர் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. ஆர்-3பி வருமானங்களின் எண்ணிக்கை 80 லட்சம் தெரிவித்துள்ளது. அதேபோல், அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 155 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளதாகவும் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், இது 10 சதவீதம் கூடுதல். மேலும், இறக்குமதி வருவாய் 9 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய் 11 சதவீதமும், கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடும்போது அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்