பீகாரில் 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு தேர்தல்
பீகாரில் 2 ஆம் கட்டமாக, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் ஆயிரத்து 463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பீகாரில் 2 ஆம் கட்டமாக, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் ஆயிரத்து 463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆயிரத்து 316 ஆண் வேட்பாளர்களும், 146 பெண் வேட்பாளர்களும், திருநங்கைகளும், 513 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியின் 4 அமைச்சர்களும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும், அவரது மூத்த சகோதரர் தேஜ்பிரதாப் யாதவும் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல்கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
4 மணி வரை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பரப்புரை இன்று மாலை 4 மணிக்கும், 6 மணி வரை தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பரப்புரை இன்று மாலை 6 மணிக்கும் நிறைவடைகிறது.
Next Story