ரூ 500-ல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்

குறைந்த செலவில் கொரோனா பரிசோதனை முடிவை விரைந்து தெரிந்து கொள்ள வகை செய்துள்ளது, புதிய கொரோனா பரிசோதனை கருவியான 'பெலுடா'.
ரூ 500-ல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்
x
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சத்ய ஜித்ரே உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரமான பெலூடாவின் பெயர் தான், இந்த கொரோனா பரிசோதனை கருவிக்கு சூட்டப்பட்டுள்ளது. 

தினமும் 20 மணி நேரம் என இரண்டு மாத காலமாக பல ஆய்வுகளை மேற்கொண்டு ஸ்ட்ரிப் போன்ற இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர், விஞ்ஞானிகள்  தேபோஜ்யோதி சக்கரவர்த்தி, சவுவிக் மைத்தி ஆகியோர் தலைமையிலான குழு.

கிட்டத்தட்ட பிரக்னன்சி டெஸ்ட் மாதிரி எளிய முறையில் இந்த கொரோனா பரிசோதனை கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரிப்பில் இரண்டு கோடு வந்தால் கொரோனா பாசிடிவ் என்றும், ஒரு கோடு மட்டும் வந்தால் 98 சதவீதம் தொற்று இல்லை என்பதும் உறுதியாகிறது. 

சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பரிசோதனை முறையில், வைரஸின் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்டதும், வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்த 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்