முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்
x
கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதேபோல, சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 மாதத்தில் 500 க்கும் குறைவாக உயிரிழந்தோர்  எண்ணிக்கை பதிவானது இதுவே முதன் முறை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜூலை 10 ஆம் தேதி 475 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த பின்னர், முதன் முறையாக நேற்று இறப்பு எண்ணிக்கை 500-க்கு குறைவாக வந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு 900 முதல் ஆயிரம் பேர் வரை பலியாகினர். செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஆயிரத்து 100 ஆக அதிகரித்தது.

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை பாதிப்பு மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுடன் , உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கும் கீழ் என கணிசமாக குறைந்தது.

இந்த நிலையில் நேற்று 3 மாதங்களுக்குப் பின்னர் முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 500 க்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை நாட்டில் ஒரு லட்சத்து19 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்