நவராத்திரி விழா - பான்கே பிகாரி கோயிலில் குவிந்த பக்தர்கள்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், உள்ள பான்கே பிகாரி கோவிலில், வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நவராத்திரி விழா - பான்கே பிகாரி கோயிலில் குவிந்த பக்தர்கள்
x
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், உள்ள பான்கே பிகாரி கோவிலில், வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த இந்த கோவில் தற்போது நவராத்திரியை ஒட்டி திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகளவு பக்தர்கள் வழிபாடு நடத்த குவிந்தனர். இதனால், கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என கூறி, கோயிலை நிர்வாகம் மூடியது. பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதிச்சீட்டு வழங்கும் நடைமுறை துவங்கும் வரை மூடப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


நவராத்திரி விழா - 2 வது நாள் கோலாகலம் - சந்திரிகா தேவி கோயிலில் குவிந்த பக்தர்கள்

நவராத்திரி விழாவை ஒட்டி,  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில், பக்தர்கள் குவிந்தனர். நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று, சந்திரிகா தேவி கோயிலில், அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ஆரத்தி காட்டப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்