சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்
பதிவு : அக்டோபர் 14, 2020, 11:08 AM
கேரளாவில், சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிய ரெஜி என்ற பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கல்லர்குட்டி சாலையில் பாலக்காடு ஆயுர்வேத மருத்துவமனை வைத்துள்ளார், பாதிரியாரான ரெஜி. அந்த மருத்துவமனைக்கு,  வயிற்று வலிக்கு சிகிச்சை பெற 22 வயது இளம்பெண், தனது தாயுடன் வந்துள்ளார். தாயை தனியாக அமர வைத்த பாதிரியார் ரெஜி, இளம் பெண்ணுக்கு பரிசோதனை செய்யும் போது பாலியல் சீண்டல் ரீதியிலான செய்கையில் ஈடுபட்டுள்ளார். போதாக்குறைக்கு,  அந்தப் பெண்ணுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறிய பாதிரியார், அவரை உடல் ரீதியாக தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.வீடு திரும்பிய இளம் பெண், பாதிரியார் தன் உடலில் தவறான எண்ணத்தோடு கைகளை பரவவிட்டதை, உறவினர்களிடம் கண்ணீர் மல்க கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்து மருத்துவமனை வந்த பெண்ணின் உறவினர்கள், பாலியல் சீண்டல் பாதிரியார் ரெஜியை தாக்க முயன்றனர். 
தகவலறிந்து வந்த போலீசார், பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் சீண்டல் பாதிரியார் ரெஜியை கைது செய்தனர். காவல்துறை அலுவலகம் அழைத்துச் சென்ற பாதிரியார் ரெஜி, சிறிது நேரம் முகத்தை மறைத்தும், பிறகு கம்பீரமாகவும் அமர்ந்தது, முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழியை ஞாபகப்படுத்திச் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

392 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

172 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

54 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

13 views

பிற செய்திகள்

களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன

17 views

சூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு

"10 லட்சம் பேருக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் " - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி

184 views

குஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

சோலார் மின் உற்பத்தி, விநியோகத்தில் இந்தியா முன்னணி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

19 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

24 views

களை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா - திரிணாமூல் காங். எம்.பி. நுஸ்ரத் ஜஹான் வழிபாடு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன.

7 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.