நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு அனுமதி - பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வீதி உலா நடத்தவும், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு அனுமதி - பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ள நவராத்திரி பிரமோற்சவம் குறித்து விவாதிக்கப்பட்டது.  குறிப்பாக தரிசனத்திற்கான டோக்கன் பெற்ற பக்தர்கள் பிரம்மோற்சவத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நான்கு மாட வீதிகளில் வரும் பக்தர்களை தெர்மா மீட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தற்போது 14 ஆம் தேதியிலிருந்து 24 ஆம்  தேதி வரை தரிசனத்திற்கான டிக்கெட் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  மேலும் தேவைக்கேற்ப டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்