தொடரும் போதை பொருள் கடத்தல் தடுப்பு வேட்டை - 28 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் தற்போது மேலும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் போதை பொருள் கடத்தல் தடுப்பு வேட்டை - 28 பேர் கைது
x
பெங்களூர் நகரில் போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை ராகினி திவேதி நகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2 கோடிக்கும் அதிக மதிப்பிலான 200 கிலோ கஞ்சா, எம்.டி.எம்.ஏ போதைப்பொருள், எல்.எஸ்.டி ஸ்டிரிப் போன்ற போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 28 பேரில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரின் மகன் ஒருவனும் இடம்பெற்றுள்ளார். இதே போல வாடிக்கையாளர்களுக்கு இந்த போதைப்பொருளை சப்ளை செய்ய ஸ்விக்கி மற்றும் டன்ஸோ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி பாய்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் பல கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் ஆணையர் முருகன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்