கொரோனா பாதிப்பில் 2வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்

கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
கொரோனா பாதிப்பில் 2வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
x
இரண்டாவது இடத்தில் இருந்த பிரேசிலில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 41 லட்சத்து 23 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 41 லட்சத்து 60 ஆயிரத்து 493 பேருக்கு தொற்று அதிகரிப்பால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  அதேநேரம் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை  64 லட்சத்து 34 ஆயிரத்து 526 -ஆக இருப்பதால் தொடர்ந்து அந்நாடு முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக 94 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 30 வரையான ஒருவார காலத்தை ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகமாகும்.

Next Story

மேலும் செய்திகள்