காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 போலீசார் பலி, ஒருவர் படுகாயம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரு போலீசார் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 போலீசார் பலி, ஒருவர் படுகாயம்
x
ஜம்மு, காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி, தீவிரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று போலீசார் படுகாயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியை சுற்றிவளைத்துள்ள போலீசார், தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்