வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

முறையாக வரி செலுத்தி வருபவர்களைக் கௌரவிக்கும் வகையில், மத்திய அரசால் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
x
வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளரை மதித்தல் என்ற இந்தத் திட்டத்தை, காணொலி  காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினரும்
கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய அவர், இந்தத் திட்டம் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு புதிய பாலமாக அமையும் என்றார்.

நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நேர்மையாக வரி செலுத்துவோர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றார்.

வரி செலுத்த முடிந்தவர்கள் சுயமாக முன்வந்து வரி செலுத்த முன்வர வேண்டும் என்பது தனது வேண்டுகோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும் என்றும், 

முகநூல் முறையீடு செய்வதற்கான வசதி செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றும் மோடி தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை கோடி அதிகரித்துள்ளதாகவும், பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்