தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்.
தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு - உச்ச நடிகர்கள் இடையிலான ஒற்றுமைகள்
x
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார், நடிகர் விஜய்... திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக பயணிக்கிறார்கள் என அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும் இடையிலான ஒற்றுமை என்ன... பார்க்கலாம்...

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு சமீபத்தில் தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடினார். 

மகேஷ் பாபு மரக்கன்று ஒன்றை நட்டு GreenIndiaChallenge-ல் பங்கேற்குமாறு, நடிகர் விஜய் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்தார். 

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக்கொண்டு மரக்கன்று நட்ட விஜய், அதனை தமது டிவிட்டர் பதிவிட்டார். 

இது இருவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

திரையில் ஸ்டைல், புகழ், ரசிகர்கள் பட்டாளம் என அனைத்திலும்,  நடிகர் விஜய், மகேஷ் பாபு சரி சமம் என்றே சொல்லலாம்...

 இருவரும் எப்போது ஒரே திசையை நோக்கியே தங்களது பயணத்தை முன்னெடுக்கின்றனர். 

இருவரும் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ், மூன்றிலும் மெர்சல் செய்வார்கள். 

மகேஷ் பாபுவின் ஒக்கடு தான் தமிழில் கில்லியாக வந்து விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்தது.

பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட விஜய்யின் போக்கிரியும், மகேஷ் பாபுவின் படத்தின் ரீமேக் தான்...

சமீபத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள 'மகர்ஷி' ,   பரத் என்னும் நான்,  போன்ற படங்களில் வரும் காட்சிகள், நடிகர் விஜய்யின் சர்க்கார் படத்தில் வரும் காட்சிகள் போலவே இயல்பாக அமைந்து விட்டன.

மகேஷ் பாபுவின் " சரிலேரு நீகேவரு" என்ற படத்தில், விஜய்யின் துப்பாக்கி சாயலை தழுவி சில காட்சிகள் இருக்கும்.

இப்படி அவர்கள்  அணியும் ஆடை முதல் பல ஒற்றுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். 

அந்த வரிசையில், தற்போது சுற்றுச்சூழலக்காக இவர்களது சமூக முன்னெடுப்பும் இணைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்