கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7 நாட்களாக வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன.
கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் - தனி பாலம் அமைத்து மீட்பு
x
கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் கடந்த 7  நாட்களாக  வெள்ளத்திற்கு இடையே மரங்களில் குரங்குகள் சிக்கிக் கொண்டன. படகு மூலமாக சென்று, குரங்குகளை மீட்க பல முயற்சிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் மீட்பு பணிகள் கைவிடப்பட்டு குரங்குகளுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்து வெள்ளத்தின் அளவு குறைந்த நிலையில், பிரத்யேக பாலம் அமைத்தனர். அதன் வழியாக குரங்குகள் நடந்து சென்றன. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக, விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்