பிரணாப் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மகளின் உருக்கமான பதிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
பிரணாப்  உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மகளின் உருக்கமான பதிவு
x
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், எனது தந்தை பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருந்தது என்றும்,  மிகச்சரியாக ஓராண்டு கழித்து அவரது உடல் நலம் தற்போது  மோசமாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மிகச் சரியானதை கடவுள் அவருக்கு செய்யட்டும் என்றும், வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் ஆற்றலை எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு வழங்க வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  அவரது நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் உள்ளார்ந்த நன்றியையும்  அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்