பயணிகள் ரயில் சேவை எப்போது? - ஆக.13 முதல் ரயில் சேவை தொடங்குமா?

ரயில் சேவை ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 முதல் ரயில் சேவை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பயணிகள் ரயில் சேவை எப்போது? - ஆக.13 முதல் ரயில் சேவை தொடங்குமா?
x
ரயில் சேவை ஆகஸ்ட் 12 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 முதல் ரயில் சேவை துவங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, செப்டம்பர் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த செய்திகள் சரியான தகவல் இல்லை என ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. பயணிகளுக்கான சிறப்பு  ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ரயில்வே அமைச்சக தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஆகஸ்ட் 13 முதல் ரயில்கள் இயங்குமா அல்லது ரத்து நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அடுத்த அறிவிப்பு வந்தால் தான் தெரிய வரும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்