இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு

கேரள மாநிலம், இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.
x
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இடுக்கி ராஜமலை பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கினர். அவர்களை தேடும் பணி மூன்று நாட்களாக நீடிக்கும் நிலையில், நேற்று வரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.  இந்நிலையில் இன்று மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 38 பேரை தேடும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை 
அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்