ஆகஸ்ட் 5-ல், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் - பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் திட்டம்
பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஆர்டர் பேரில், கோதண்டராமர் சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் தயாரித்துள்ளார்.
பிரதமருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஆர்டர் பேரில், கோதண்டராமர் சிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கலைஞர் ஒருவர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருக்கு பரிசளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தேசிய விருது பெற்ற பெங்களூருவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற சிற்பக் கலை வல்லுநரிடம் கோதண்டராமன் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். ஒன்றரை அடி உயரத்தில் சோழர்கால கலை அம்சத்துடன் தென்னிந்திய கலை அம்சங்களையும் சேர்த்து கோதண்ட ராமர் சிலையை ராமமூர்த்தி வடிவமைத்துள்ளார். இந்த சிலையுடன் லவ குசா ஆகிய சிலைகளையும் வடிவமைத்து முதல்வர் ஆதித்யநாத்க்கு அனுப்பி வைக்கிறார்.
Next Story