ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் போர்க்கொடி - ரிசார்ட் ஹோட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு

ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க பாஜக முயல்வதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் போர்க்கொடி - ரிசார்ட் ஹோட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு
x
ராஜஸ்தானில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க பாஜக முயல்வதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து ஜெய்ப்பூரில் முதலமைச்சர் இல்லத்தில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சொகுசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு பேர் மௌண்ட் ரிசார்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்