"ராஜஸ்தான் நெருக்கடிக்கு காரணம் ராகுல் காந்தி" - முன்னாள் முதலமைச்ச​ர் உமாபாரதி குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிக்கு, ராகுல்காந்தி தான் காரணம் என பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜஸ்தான் நெருக்கடிக்கு காரணம் ராகுல் காந்தி - முன்னாள் முதலமைச்ச​ர் உமாபாரதி குற்றச்சாட்டு
x
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிக்கு, ராகுல்காந்தி தான் காரணம் என பா.ஜ.க. மூத்த தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார். சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற இளம் தலைவர்களை கட்சியில் வளரவிடாமல் ராகுல்காந்தி தடுத்து வருவதாகவும், தமக்கு போட்டியாக உருவெடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் ராகுல் காந்தி செயல்பட்டு வருவதாகவும் உமாபாரதி குற்றம்சாட்டி உள்ளார். இளம் தலைவர்கள் வளர்ந்து விட்டால் தாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ராகுல்காந்தியிடம் மேலோங்கி உள்ளதாக உமாபாரதி சாடியுள்ளார்.

முதலமைச்சராக தகுதி உள்ளவர் சச்சின் பைலட் : ராஜஸ்தான் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கருத்து 




ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக தகுதி உள்ளவர் சச்சின் பைலட் என்றும், ஆனால் அசோக் கெலோட் முதலமைச்சராக ஆனதாக அம்மாநில பா.ஜ.க. மாநிலத் தலைவர் சதீஸ் புனியா தெரிவித்துள்ளார். அசோக் கெலோட் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இந்த பிரச்சனை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வருவதாகவும், அதனுடைய தொடர்ச்சி தான் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் என சதீஸ் புனியா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்