மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பான வழக்கு: ஜூலை 13-க்கு ​விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை, வரும் திங்கள் கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பான வழக்கு: ஜூலை 13-க்கு ​விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்
x
நீட் தேர்வின் அடிப்படையில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல், ஏப்ரல் 4-ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பட்டியல் படி மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை கோரி மருத்துவ மாணவர் டிஜி பாபு தாக்கல் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். இதே போன்று, மருத்துவ படிப்பில்  மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில்  50 சதவீத இடங்களை, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்,  தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஆகியவை  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் , கடந்த முறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது,  தி.மு.க. வழக்கும், சலோனி குமாரி வழக்கும் ஒரே கோரிக்கையை கொண்டது  என வாதிட்டீர்கள், ஆனால் இப்போது இரு வழக்குகளும் வேறு என தெரிவிக்கின்றீர்களே ? என தமிழக அரசின் மூத்த வழக்கறிஞரை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வி.கிரி,  தமிழக அரசின் மனு, சலோனி குமாரி வழக்கில் இருந்து மாறுபட்டது என்றார். ஏனெனில் சலோனி குமாரி வழக்கு  உத்தரபிரதேச மாநிலத்துக்கானது என்றும், அவரின் கோரிக்கை  என்பது அகில இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ பொருந்தாது என்று வாதிட்டார். இதையடுத்து, சலோனி குமாரி  வழக்கை ஆராய்ந்த பின்னர், இந்த வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்ற அமர்வு, மனுக்கள் மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்