பாதிப்பில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை 55.77% - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 37 ஆயிரத்து 195 பேர் குணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாதிப்பில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை 55.77% - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 37 ஆயிரத்து 195 பேர், குணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,  9 ஆயிரத்து 440 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில்,  கூறப்பட்டுள்ளது. நோயாளிகள் குணமடையும் விகிதம் 55 புள்ளி 77 சதவீதமாக உள்ளது. இதுவரை, மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து195 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது, ​ஒரு லட்சத்து​74 ஆயிரத்து 387 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட சுமார் 63 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்