ஐஎன்எஸ் விக்ராந்த்" கப்பலில் கணினி பாகங்கள் திருடப்பட்ட விவகாரம் - 2 வடமாநில நபர்கள் கைது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல், கொச்சி கப்பற்படை தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கணினி பாகங்கள் திருடப்பட்ட விவகாரம் - 2 வடமாநில நபர்கள் கைது
x
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கி கப்பல், கொச்சி கப்பற்படை தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் இருந்த கணினியில் 10 ஹார்டு டிஸ்க்குகள், 3 ரேம் உள்ளிட்டவை , 2019ஆம் ஆண்டு திருடு போய் இருந்தன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான்  மற்றும் பீகாரைச் சேர்ந்த இருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். கப்பலில் பெயிண்டராக வேலை பார்த்து வந்த தங்கள் இருவரையும் வேலையில் இருந்து நீக்கியதால், ஓப்பந்ததாரரை பழிவாங்குவதற்காக திருடியதாக இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.  தற்போது மேல் விசாரணைக்காக இருவரும் விமானம் மூலம்  கொச்சி அழைத்து வரப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்