காஷ்​மீரில் ஹிஸ்புல் கமாண்டர் ரியாஷ் நைக்கு சுட்டுக் கொலை

ஜம்மு, காஷ்மீரில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் ஹிஸ்புல் கமாண்டர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்​மீரில் ஹிஸ்புல் கமாண்டர் ரியாஷ் நைக்கு சுட்டுக் கொலை
x
ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட  அவந்திபுரா அருகில் உள்ள  ஷார்சாலி கேரூ பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், கூட்டுப் படையினருக்கும் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோன்று பெய்க்புராவில் நடைபெற்ற மற்றொரு சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்  ஹிஸ்புல் அமைப்பின் கமாண்டரான ரியாஷ் நைக்கு என்றும், தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் சரக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்