நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது
x
* மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 21ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவிய காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

* அதில், நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

* தலைநகர் டெல்லியில், 186ஆக இருந்த காற்று மாசு தரம் 79 ஆக குறைந்துள்ளது. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 147 இல் 91 ஆகவும், 

* மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் 128 இல் இருந்து 108 ஆகவும், கர்நாடகா மாநில தலைவர் பெங்களூருவில் 105 ல் இருந்து 69ஆகவும்

* தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 90 - 73 ஆக குறைவு, தமிழக தலைநகர் சென்னையில் 70 -  56 ஆக குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

* இன்னும் ஊரடங்கு முடிவதற்கு ஒரு வார காலம் இருப்பதால், காற்றின் மாசு அளவு மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்