கொரோனா வைரஸ் தொற்று வார்டில் பணி செய்ய மறுப்பு: 54 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை

புதுச்சேரியில், கொரோனா வைரஸுக்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத 54 தற்காலிக ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் அருண், பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று வார்டில் பணி செய்ய மறுப்பு: 54 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை
x
புதுச்சேரியில், கொரோனா வைரஸுக்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத 54 தற்காலிக ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் அருண், பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேர் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் 28 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை ஏற்க முடியாது என கூறி வந்த தற்காலிக பணியாளர்களில் 54 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. அவர்கள் 54 பேரையும் பணி நீக்கம் செய்வதாக, மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்