கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?
x

 வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஒருவர் கொரோனா பாதிப்போடு வருவது முதற்கட்ட நிலையாகும். 

* இரண்டாவது கட்டம் என்பது கொரோனாவோடு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர், தனது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வைரஸை பரப்புவது. இது உள்ளூர் மட்டத்திலான பரவல் எனப்படும்.

* அந்த வெளிநாட்டு நபர் மற்றும் அவரது வீட்டினர்  மூலம் ஊரில் இருக்கும் நபர்கள், அப்படியே வெளி ஊரில் இருக்கும் நபர்கள் என்று வரிசையாக பலருக்கு கொரோனா பரவுவது கட்டம் 3. இதுதான் சமூக பரவல். இதை கட்டுப்படுத்த முடியாது. 

* 4 வது கட்டம் என்பது இந்த சமூக பரவல் பலருக்கு பரவி, யாருக்கு முதலில் தோன்றியது, எப்படி பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பல ஆயிரம் பேருக்கு பரவுவது. இது மின்னல் வேக பரவல் எனப்படுகிறது.

* இந்தியாவில் தற்போது சமூகப் பரவல் உள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் வீடுகளுக்குள் இருப்பதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் கட்டுப்படுத்த  முடியும் என்பதால் அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்