சத்தீஸ்கரில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் உடனான துப்பாக்கிச் சண்டையின்போது காணாமல் போன 17 பாதுகாப்புப் படை வீரா்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
சத்தீஸ்கரில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் சடலமாக மீட்பு
x
தண்டேவாடா மாவட்டம் எல்மகுண்டா அருகே நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு பணிக் குழு , மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை சோ்ந்த  600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா். கோரச்குடா மலைப் பகுதி அருகே சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் எதிா் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த 14 வீரர்கள்  ராய்ப்பூர் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, துப்பாக்கி சூட்டின் போது மாயமான 17 வீரா்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகளின் இந்த தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி வன்மையாக கண்டித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்