பெண்கள் மூட்டை தூக்குவதை பாராட்டி இந்திய ரயில்வே துறை வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு

பெண்கள் மூட்டை தூக்குவதை பாராட்டி, இந்திய ரயில்வே துறை வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெண்கள் மூட்டை தூக்குவதை பாராட்டி இந்திய ரயில்வே துறை வெளியிட்ட புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு
x
இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில் நிலையங்களில் மூட்டை தூக்கும் சில பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்கள் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்கள் என பதிவு செய்திருந்தது. கூலி என்ற சொல், இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டதற்கு  இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர். இது போன்று பெண்கள் நடத்தப்படுவது தவறானது என்பதால் அதை பெரியார், அண்ணா, கருணாநிதி,ஜெயலலிதா ஆகியோர் கடுமையாக எதிர்த்ததாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கை ரிக்‌ஷா இழுப்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டது குறிப்பித்தக்கது. இருப்பினும் பெண் கைகளால் வண்டியை இழுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள இந்திய ரயில்வே துறைக்கு கண்டனங்கள் குவிகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்