டெல்லியில் பரவி வரும் கொரோனா - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

டெல்லியில் வன்முறை தாக்குதலை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்குதல் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் பரவி வரும் கொரோனா - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
* இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* 28 பேரில், இத்தாலியை சேர்ந்த தம்பதிக்கு, ஜெய்பூர் எ​ஸ்எம்எஸ் மருத்துவமனையிலும், 14 பேரும், வாகன ஓட்டுநரும் எல்லை பாதுகாப்பு படையின் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த 24  வயது இளைஞருக்கு தெலங்கானாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* டெல்லி மயூர் விஹார் பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் மூலமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு உறவினர்களும் 
கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள், டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

* பொதுவாக காற்று மாசுக்கு முகமூடி கவசம் அணியும் டெல்லி மக்கள், தற்போது கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, முகமூடி கவசங்கள் அணிய தொடங்கி உள்ளனர்.

* இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முகமூடி அணிவது தீர்வல்ல என்றும், அனைவருக்கும் அது தேவைப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தங்களை சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* கொரோனா வைரஸால் வரும் எந்த ஒரு சவால்களையும் எதிர்கொள்ள டெல்லி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

* கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

* டெல்லி வன்முறை சம்பவத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ,டெல்லி மக்களுக்கு மீண்டும் கொரோனா பரவும் அபாயம், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்